உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை, திருவாரூர் யானைகள் பயணம்

தஞ்சை, திருவாரூர் யானைகள் பயணம்

தஞ்சாவூர்:கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு, ஆண்டுதோறும் அரசு சார்பில், "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் நடத்தப்படும் முகாமில் பங்கேற்க, தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோவில் யானை தர்மாம்பாள், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் யானை செங்கமலம் ஆகியவை, லாரிகளில் புறப்பட்டு சென்றது. அந்த யானைகளுக்கு, தஞ்சையில் சிறப்பு பூஜைகள் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டது. இதில் இணை கமிஷனர் குமரவேல், உதவி கமிஷனர்கள் ஞானசேகர், சிவராமன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்யானைகளுடன் நாகப்பட்டினம் இந்துசமய அறநிலை துறை உதவி கமிஷனர் ரத்தினவேல் மற்றும் கால்நடை டாக்டர் உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !