மேல்மருவத்தூருக்கு இருமுடி பயணம்
ADDED :3960 days ago
கீழக்கரை : கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகரில் உள்ள ஓம்சக்தி வாரவழிபாட்டு குழு சார்பில், தைப்பூச விழாவையொட்டி மேல்மருவத்தூருக்கு செல்வதற்கு 300 பக்தர்கள் இருமுடி பயணம் மேற்கொண்டனர். முன்னதாக சக்திமாலை அணிந்த பக்தர்களின் சக்தி பாராயணம், நாம அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை அம்மாடி முருகாண்டி, சுப்புலெட்சுமி, மலர்கொடி, நாகவள்ளி, உமய செல்வி செய்திருந்தனர்.