அய்யப்ப பக்தர்களின் மண்டல பூஜை!
ADDED :3956 days ago
அடையாறு: குடியிருப்போர் நல சங்கம் சார்பில், அய்யப்ப பக்தர்களின் மண்டல பூஜை நடந்தது.
அடையாறு, சாஸ்திரி நகர், 5வது குறுக்கு தெருவில் உள்ள சாஸ்திரி சமுதாய கூடத்தில், குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், அய்யப்ப பக்தர்களின் மண்டல பூஜை, குருசாமி சந்திரசேகர் தலைமையில் நேற்று நடந்தது.பூஜைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன், பசுமை தீர்ப்பாய நீதிபதி நகேந்திரன், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம், வழக்கறிஞர்கள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.