உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை கோவிலில் அய்யப்ப சுவாமி பூஜை!

ஊத்துக்கோட்டை கோவிலில் அய்யப்ப சுவாமி பூஜை!

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், அய்யப்ப சுவாமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை யில், 45ம் ஆண்டு அய்யப்ப சுவாமி திருவிளக்கு பூஜையின், இரண்டு நாள் விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, அங்குள்ள ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், யாகம் வளர்த்து சிறப்பு பூஜையும், தொடர்ந்து அங்குள்ள அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அப்போது, மாலை அணிந்த அய்யப்ப பக்தர்களின் பஜனை பாடல்கள் பாடினர்.

இரண்டாம் நாளான, நேற்று முன்தினம் (13ம் தேதி) காலை 11:00 மணிக்கு, கேரளாவின் பாரம்பரிய இசையான, செண்ட மேளத்துடன், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, அய்யப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன், அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மழையிலும்...சுவாமிக்கு முன், பெண்கள், சிறுமிகள் விளக்கு ஏந்திச் சென்றனர். பலத்த மழை பெய்தும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !