பனமரத்துப்பட்டியில் சனிப்பெயர்ச்சி பூஜை!
ADDED :3957 days ago
பனமரத்துப்பட்டி : மல்லூர் கோட்டைமேடு பகுதியில், சனீஸ்வரர் கோவில் உள்ளது. சனீஸ்வரர், டிசம்பர், 16ம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். விருச்சிக ராசியில், சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுகள் தங்கி, 12 ராசியினருக்கும் பல்வேறு பலன்களை அருள்பாலிக்கிறார்.
சனி பெயர்ச்சியை முன்னிட்டு, மல்லூர் கோட்டைமேடு சனீஸ்வரர் கோவிலில், பரிகார ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு, அபிஷேகம், பரிகாரம் ஹோமம், மதியம், 3 மணிக்கு, மஹாதீபாராதனை நடக்கிறது. பொது மக்கள், சனிப்பெயர்ச்சி பரிகார பூஜையில் பங்கேற்று, கறுப்பு, நீல வஸ்திரங்கள், கருப்பு எள், எள் எண்ணெய், வன்னிமர சமீத்துகள் வழங்கி, சனீஸ்வரரின் அருள் பெறலாம்.