உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவருக்கு சிறப்பு பூஜை!

கால பைரவருக்கு சிறப்பு பூஜை!

நகரி: சிவன் கோவில்களில், கால பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
நகரி டவுனில் உள்ள, காமாட்சி சமேத கரகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில், தனியாக கட்டப் பட்டுள்ள கால பைரவர் சன்னிதியில், நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலை மகா யாகம், சிறப்பு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம், சகஸ்ர அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.திருத்தணி: திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள, காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், கால பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

இதை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 3:30 மணிக்கு, கால பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
இரவு 7:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !