காளத்தீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!
ADDED :3974 days ago
புதுச்சேரி: காளத்தீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம், பெரும்பாலும் நான்கு திங்கள் கிழமைகளை (சோமவாரம்) கொண்டிருக்கும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே, கார்த்திகை மாதத்தில், ஐந்தாவது திங்கள்கிழமை (சோமவாரம்) வரும். கார்த்திகை ஐந்தாவது சோமவாரத்தை முன்னிட்டு, மிஷன் வீதியில் அமைந்துள்ள, காளத்தீஸ்வரர் கோவிலில், 1008 சங்குகள் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விசேஷ ஹோமம், பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.