மூலநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!
ADDED :4283 days ago
பாகூர்: கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், 1008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. காலை 9.00 மணிக்கு, விநாயகர், வேதாம்பிகையம்மன், மூலநாதர், சண்டிகேஸ்வரர், முருகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ௯.30 மணிக்கு, கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. 11.30 மணிக்கு 1008 சங்குகளால், சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.