மார்கழி தெய்வத்தமிழ் இசைவிழா வடசென்னையில் இன்று துவக்கம்!
ADDED :4103 days ago
வண்ணாரப்பேட்டை: வடசென்னையில், 27ம் ஆண்டு மார்கழி தெய்வத்தமிழ் இசை விழா, இன்று முதல் துவங்குகிறது. வண்ணாரப்பேட்டை, பேரம்பாலு தெருவில் உள்ள கோதண்டாராமர் கோவிலில், 27ம் ஆண்டு மார்கழி தெய்வத்தமிழிசை விழா, இன்று துவங்குகிறது.காலை 6:00 மணிக்கு, பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர மங்கல இசையுடன் துவங்கும் இசை விழாவில், பத்மபூஷண் விநாயகராம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தினமும் காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை மார்கழி இசை விழா நடக்கவுள்ளது. ஜனவரி 14ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறும் இசை விழாவில், சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டும் டி.கே.எஸ்.கலைவாணன், சீர்காழி கோ.சிவசிதம்பரம் உள்ளிட்ட பலரின் இன்னிசையும், மா.கி.ரமணன் உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளும் நடக்க உள்ளன.