தர்ம முனீஸ்வரர் கோயிலில் மார்கழி பூஜை!
ADDED :4107 days ago
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு நாடார் தெருவில் உள்ள தர்மமுனீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5 மணியளவில் மூலவர், பாதாளகாளியம்மன், விநாயகர் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் முதலியவைகள் பக்தர்களால் பாடப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. கோயில் தர்மகர்த்தா பி.எஸ்.சுப்பிரமணியன், நிர்வாகத்தலைவர் வேலாயுதம், பரமசிவபாண்டியன் உள்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.