தேசமுத்து மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பஜனை துவக்கம்!
ADDED :4302 days ago
புதுச்சேரி: சுப்ரமணிய பாரதியாரால் பாடப்பட்ட, தேசமுத்து மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பஜனை நேற்று நடந்தது. மார்கழி மாதத்தையொட்டி, உப்பளம், நேத்தாஜி நகர், பாரதி வீதியில் உள்ள தேசமுத்து மாரியம்மன் கோவிலில், 107வது ஆண்டு மார்கழி பஜனை நிகழ்ச்சி நேற்று துவக்கியது. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மகாலிங்கம் தலைமையில், துணைத் தலைவர் ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் கலந்து கொண்டனர். பஜனை குழுவினர் காலை 5:30 மணிக்கு புறப்பட்டு மாட வீதி வழியாக வலம் வந்தனர்.