டிச., 20, 21ல் சங்கரமேளா கொடிசியாவில் ஆன்மிக விழா!
கோவை : வரும் 20,21 தேதிகளில், கொடிசியா அரங்கில் சங்கர மேளா 2014 எனும் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது.ஸ்ரீசங்கரா டிவியின் முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார், மேலாளர் மணி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், சங்கரா டிவி கொங்குநாட்டு மக்களுக்காக, கோவையில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதற்காக, 25 அடி உயர பாலாஜி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இலவச பூஜையில், வெங்கடேசபெருமாளை தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தவிர, பிரபல இசைக்கலைஞர்கள் சுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீனிவாச,கிரிஜா, சீதா, லட்சுமிநரசிம்மர், ராதா கல்யாணம் என பஞ்சகல்யாண வைபவங்கள், ஒரே மேடையில், ஒரே முகூர்த்தத்தில் நடக்கிறது.பாமர மக்களையும் பக்தியில் ஆழ்த்தும் பஜனை பாடல்களுக்கென போட்டியை சங்கரா டிவி நடத்துகிறது.இறுதி போட்டியில் வெற்றி பெறும் குழுவை தேர்வு செய்யும் விறுவிறுப்பான இறுதிச் சுற்று பஜனை பிரியர்கள் முன்னிலையில் வரும் 20, 21ம் தேதிகளில் நடக்கிறது.பிளாட்பார்ம் டூ பெர்பாம் எனும் நிகழ்ச்சியில், இந்திய பாரம்பரிய கலைகள், நடனம், இன்னிசையில் தனித்திறமையுள்ளவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க கட்டணமோ, வயது வரம்போ கிடையாது. இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு, 0422 4337222 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.