பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 23 ஆயிரம் வடை மாலை!
ADDED :4084 days ago
திருப்பந்தியூர்: திருப்பந்தியூர், ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, 23 ஆயிரம் வடை மாலை சாற்றி, அலங்கார தரிசனம் நடைபெறுகிறது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பண்ணுார் அருகே உள்ளது திருப்பந்தியூர் ஊராட்சி.
இங்குள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, 23 ஆயிரம் வடை மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக, காலை 5:30 மணிக்கு, திருமஞ்சனமும், காலை 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் ஊஞ்சல் சேவையும், காலை 11:00 மணிக்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, 23 ஆயிரம் வடை மாலை அலங்கார தரிசனமும் நடைபெறும்.