உலக நன்மைக்காக யாக பூஜை!
ADDED :4085 days ago
சோழவந்தான்: சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி சிவன் கோயிலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு உலக நன்மைக்காக யாகபூஜை நடந்தது.இதையொட்டி நடந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் சிவாச்சாரியார் ரவிச்சந்திரன் பிரசாதம் வழங்கினார். சிவாச்சாரியார்கள் சீனிவாசராகவன், வரதராஜபண்டிட் யாகபூஜை செய்தனர். பிரதோஷகமிட்டியினர் அன்னதானம் வழங்கினர். எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குனர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.