உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் அய்யப்பன் திருவிழாவில் யானை ஊர்வலம்!

அன்னுார் அய்யப்பன் திருவிழாவில் யானை ஊர்வலம்!

அன்னுார் : அன்னுார் அய்யப்பன் திருவிழாவில், செண்டை மேளத்துடன் யானை ஊர்வலம் நடந்தது. அன்னுார் அய்யப்பன் கோவிலில், 45ம் ஆண்டு ஐயப்பன் திருவிழா வாஸ்து பூஜையுடன், 16ம் தேதி துவங்கியது. 17ம் தேதி கொடியேற்றமும், 18ம் தேதி ஹோம பூஜைகளும் நடந்தது. 19ம் தேதி அதிகாலையில் கணபதி ஹோமம்; பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால், அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 20ம் தேதி மதியம் யானை, செண்டை மேளம், ஜமாப் குழுவுடன், புலி வாகனத்தில் ஐயப்பசாமியுடன் திருவீதியுலா நடந்தது.எக்சேஞ்ச் ரோடு, கோவை ரோடு, மெயின் ரோடு என முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. வாண வேடிக்கை, ஜமாப் இசையுடன் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியபடி, ஊர்வலத்தில் சென்றனர். ஊர்வலம் இரவு 10.00 மணிக்கு முடிந்தது.கோவில் தலைவர் அசோகன், நிர்வாக தலைவர் முனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !