புத்திர பாக்கியம் பெற!
ADDED :4339 days ago
ராசிபுரத்தில் உள்ளது கைலாசநாதர் திருக்கோயில் அம்பாள் அறம்வளர்த்த நாயகி. இங்குள்ள முருகப் பெருமானின் சிலை ஒரே கல்லால் ஆனது. பஞ்ச மூர்த்திகளுக்கும் தனித் தனி சன்னிதிகள் உள்ளன. குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் வளர்பிறை பிரதோஷத்தன்று உச்சிக்காலத்தில் அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை நைவேத்யமாகப் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் புத்திரப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.