உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளைச்சல் பெருக..

விளைச்சல் பெருக..

ராசிபுரம் அருகே, குருசாமி பாளையத்தில் உள்ளது சிவசுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு சிவசுப்ரமணிய சுவாமி மற்றும் பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். சித்ரா  பவுர்ணமி, கார்த்திகை, மாசிமகம்.... என இங்கு வருடம் முழுவதும் விழா நாட்களே. இந்நாட்களில் இங்கு வந்து பொங்கலிட்டு அன்னதானம் செய்து வழிபட்டால், அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும். சன்னதி செழிக்கும் என்பது நம்பிக்கை, ஒன்பது வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமைகளில் சிவசுப்ரமணியரை நெய் தீபம் ஏற்று வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும், திருமண பாக்கியம் கைகூடும், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் விலகும் என்பது பக்தர்கள் கூறும் அனுபவ உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !