தன்னை வணங்கும் ஆஞ்சநேயர்!
ADDED :4339 days ago
பெருமாள் கோயில்களில் சுவாமியின் எதிரே தனிச் சன்னதியிலோ, சுவாமிக்கு அருகில் நின்ற கோலத்திலோ ஆஞ்சநேயர் இருப்பார். ஆனால் மதுரை அருகிலுள்ள மன்னடிமங்கலம் நரசிம்மர் கோயிலில் ஆஞ்சநேயர் தன்னைத்தானே வணங்கும் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இக்கோயிலின் முன் மண்டப சுவரில் சிற்ப வடிவில் இருக்கும் அனுமனை, இவருக்கு முன்புறமுள்ள மற்றொரு அனுமன் இருகரம் கூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறார்.