இறைவன் கேட்ட கூலி!
ADDED :4339 days ago
பண்ருட்டிக்கும் கடலூருக்கும் இடையே அமைந்த திருக்கண்டேஸ்வரம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானுக்கு நடனபாதேஸ்வரர் என்று பெயர். இவரை சுந்தரமூர்த்தி நாயனார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர். இக்கோயில் சிவபெருமானை புகழ்ந்து சுந்தரர் பாடும்போது இறைவன் நடனமாடியதாகவும், அம்மன் கைத்தாளம் போட்டதாகவும், நந்திதேவர் இசைத்ததாகவும் முடிவில் இறைவன் ஆடியதற்கு சுந்தரரிடம் கூலி கேட்டதாகவும் வரலாறு உண்டு.