உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானைகள் அணிவகுக்க சுவாமி திருவீதி உலா!

யானைகள் அணிவகுக்க சுவாமி திருவீதி உலா!

கோவை : ஐயப்பன் பூஜா சங்கத்தின், 64வது பூஜா மகோத்சவவிழாவில், நேற்று அலங்கரிக்கப்பட்ட, மூன்று யானைகளின் மீது சுவாமி திருவீதி உலா வந்தார்.

ராம்நகர் ஐயப்பபூஜா சங்கத்தின், 64வது பூஜா மகோத்சவ விழா, டிச., 24ல் மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரஹ, விஜய, சுதர்சன ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, மகாருத்ரயக்ஞம் நடந்தது.

ஐந்தாம் நாளான நேற்று, காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை 9.00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, திருவாபரண பெட்டியுடன் மூன்று யானைகளுடன் திருமஞ்சன உலா நடந்தது. காலை 9.30 மணிக்கு, கோவை ஜெயராமன் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.தொடர்ந்து, சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பலவித மலர்களில் சுவாமிக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. மாலை 6.00 மணிக்கு புஷ்ப பல்லக்கில், மூன்று யானைகளுடன், பஞ்சவாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !