மூங்கில்துறைப்பட்டு கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு மண்டல பூஜை!
ADDED :3937 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு ஐயப்பன் கோவில் சிறப்பு மண்டல பூஜையில் 108 வலம்புரி சங்குகளால் உற்சவருக்கு அபிஷேகம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு ஸ்ரீதர்மசாஸ்தா அன்னதான சேவா சமிதி சார்பில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை கோபூஜை, கணபதி ஹோமம், தென்பெண்ணையில் ஆராட்டு விழா, கலச பூஜை, கலசாபிஷேகம், வலம்புரி சங்காபிஷேகம், பகவதிசேவா, புஷ்பாபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது. சபரிமலை மாளிகைபுரம் சன்னிதான மேல்சாந்தி பரம்மஸ்ரீ மனோஜ் எம்பிராந்திரி, பூஜைகளை நடத்தி வைத்தார். ஆலை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.