உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி: 60 ஆயிரம் லட்டு தயார்

கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி: 60 ஆயிரம் லட்டு தயார்

ஈரோடு : வைகுண்ட ஏகாதசி தினமான நாளை பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 60 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது. பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி நாளை நடக்கிறது. நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வைகுண்ட ஏகாதசி தினத்தன்று வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்க, 13வது ஆண்டாக கஸ்தூரி அரங்கநாதர் குழு தலைவர் முருகேசன், செயலாளர் ஜெயசந்திரன், உதவி செயலாளர் சந்திரசேகர் ஏற்பாட்டின் பேரில், கோகுல் லாட்ஜில் லட்டு தயாரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது.கடந்த, 27ம் தேதி முதல் லட்டு தயாரிப்பில், 30 பெண், 20 ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்களாக லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். லட்டை பேக்கிங் செய்யும் பணி நடக்கிறது. நாளை அதிகாலை முத,ல் இரவு கோவில் நடை அடைக்கும் வரை, பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, 60 ஆயிரம் லட்டு தயாரிக்கப்படுகிறது.ஏற்பாடுகளை கஸ்தூரி அரங்கநாதர் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !