உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் பாத தரிசனம்!

திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் பாத தரிசனம்!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் நடைபெற்ற பாத தரிசன நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் தியாகராஜரை வழிபட்டனர். திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் தியகராஜ ஸ்வாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு தியாகேசப் பெருமானுக்கு, முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு, 10 மணிக்கு திருவாதிரை மகா அபிஷேகமும் நடைபெற்றது. மேலும், நேற்று அதிகாலை, 4 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 6 மணிக்கு தியாகராஜ பெருமான் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும், பின்னர், 7 மணிக்கு, நடராஜ பெருமான் தரிசனமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !