உலகளந்த பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவத்தில் பெருமாள் பனிப்போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார். கோவிலை வலம் வந்து உடையவர் சன்னதியில் மண்டகபடி முடிந்து, சொர்க்க வாசல் திறந்து, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவிக்க பரமபத மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். இரவு 8.00 மணிக்கு திருவாய்மொழி ÷ சவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. பின், பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர் வையால் திருமுகம் தெரிய போர்த்தப்பட்டு ஆஸ்தானம் எழுந்தருளினார். இவ் விழாவின் நிறைவான 10ம் நாள் இரவு நம்மாழ்வார் மோட்சம் அடை யும் வைபவம் நடக்கிறது.