திருச்சுழியில் ரமண மகரிஷி பிறந்த நாள் விழா
ADDED :3955 days ago
நரிக்குடி : திருச்சுழியில் ரமண மகரிஷி 135 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோயில் செயல் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ரமண மகரிஷி திருஉருவ படத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ரமண மகரிஷி தேர் வீதி உலா நடந்தது. மதுரை சோமசுந்தரம் ஐயர் சிறப்பு வழிபாடு நடத்தினார். ஐ.ஓ.பி., அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.