உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் ஆறுகால பூஜைகள், பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், தேன், பழச்சாறு உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. கிருஷ்ணசைதன்ய தாஸின் ஹரேராம நாம சங்கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை, சொற்பொழிவு நடந்தது. பின்னர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பக்கத்து மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு திருமஞ்சன பிரசாதம் வழங்கப்ட்டது. தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, சொர்ண பூஜை நடந்தது. தேங்காய் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். கால பைரவர் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !