கொம்பு அபிஷேகம் !
ADDED :3942 days ago
நடராஜர் ஆனந்தநடனம் ஆடும்போது நந்திகேஸ்வரர் மிருதங்கம் இசைப்பார். பசுவின் தோலில் இருந்து தான் மிருதங்கம் செய்யப்படுகிறது. இசை இல்லாமல் ஆட்டம் ஆனந்தம் தருவதில்லை. ஆனால், அந்த நடனத்தைக் காட்டிலும், தனக்குச் செய்யும் அபிஷேகத்தால் சிவன் அளவிலா மகிழ்ச்சி கொள்கிறார். அதனால் அபிஷேகப்பிரியர் என்று அவரைக் குறிப்பிடுவர். பசுவின் கொம்புக்கு கோ சிருங்கம் என்று பெயர். சிவ அபிஷேகத்தின் போது ருத்ர சமகம் என்ற மந்திரம் சொல்லப்படும். அதன் ஒரு கட்டத்தில் பசுவின் கொம்பு வழியாக பாலபிஷேகம் செய்வது புனிதமானது. பால் மட்டுமில்லாமல் பஞ்சகவ்யம் என்னும் பால், தயிர், நெய், கோமியம்(பசு மூத்திரம்), கோமயம்(சாணம்) ஆகிய ஐந்தினையும் கொம்பு வழியே சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர் உலகில் பெரும் பாக்கியசாலியாக இருப்பார்.