உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டரக்கோட்டை ஆற்றுத் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்!

கண்டரக்கோட்டை ஆற்றுத் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்!

பண்ருட்டி: பண்ருட்டி மற்றும் கண்டரக்கோட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் உள்ள தென் பெண்ணையாறு, பண்ருட்டி கெடிலம்  ஆற்றுத் திருவிழா விமரிசையாக  நேற்று நடந்தது. இதனையொட்டி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் நல்லுõர் பாளையம், மாளிகைமேடு, தட்டாம் பாளையம், ராசாப்பாளையம், ஒறையூர், திருத்துறையூர், அக்கடவல்லி, எனதிரிமங்கலம், பண்ருட்டி படைவீட்டம்மன்   மற்றும் சுற்றியுள்ள 50 கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக மேள தாளம் முழங்க அழைத்து வரப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் சகிதமாக வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உற்பத்தி செய்யப்படும் பன்னீர் ரக கரும்புகள், சுருளிகிழங்குகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானது. இதே போன்று, பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நடந்த திருவிழாவில் 40 கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றனர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று கடலுõர் மற்றும் நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றில் நடந்த திருவிழாவில் ஏராளமான சுவாமிகள் தீர்த்தவாரியானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !