கள்ளக்குறிச்சியில் தீர்த்தவாரி உற்சவசம்!
ADDED :3986 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை ÷ காவிந்தராஜ பெருமாள், சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உற்சவ மூர்த்திகள் கோமுகி நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. நீலமங்கலம் கோதண்டராமர், நிறைமதி வரதராஜபெருமாள் கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது.