மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3882 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3882 days ago
திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரையில் உள்ள, பட்டினத்தார் கோவிலில், வரும், 26ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.திருவொற்றியூர் கடற்கரையில் உள்ள பட்டினத்தார் கோவில், இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ளது. அங்கு, ஒரு கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட தியான மண்டபம், மகா மண்டபம் கட்டப்பட்டன, பழமை மாறாமல் மூலவர் சன்னிதி கருங்கல்லால் புதுப்பிக்கப்பட்டது.மேலும், கோவிலை சுற்றி புதிதாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, வரும், 26ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, இன்று முதல், யாகசாலை பூஜைகள் துவங்கி நடக்க உள்ளன. வரும், 26ம் தேதி காலை 6:00 முதல் 7:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
3882 days ago
3882 days ago