உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட லிங்க தரிசனம்!

அஷ்ட லிங்க தரிசனம்!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகில் உள்ளது கூனஞ்சேரி. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்வாமியின் திருநாமம்- கயிலாசநாதர். அம்பாள்- சவுந்தர்யநாகி. சுமார் 700 வருடங்கள் பழைமை வாய்ந்த தலம் இது. மன்னர் ஒருவர் சாபத்துக்கு ஆளாக, அதன் விளைவாக அஷ்ட கோணலாகப் பிறந்த ராஜகுமாரனின் குறையைத் தீர்த்தருளினார் ஈசன் என்கிறது ஸ்தல வரலாறு. இங்கே, அஷ்ட லிங்கங்கள் அமைந்திருப்பது சிறப்பு. அஷ்டமி நாளில், இங்கு வந்து அஷ்ட லிங்கங்களையும் தரிசித்தால், நரம்பு உபாதைகள் நீங்கும்; தீராத நோயும் தீரும்; உடல் ஊனம் மட்டுமின்றி, மன ஊனமும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !