உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்ச தகவல்கள்!

ருத்ராட்ச தகவல்கள்!

ருத்ராட்சங்களில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்று கவுரிசங்கரம். பரமேஸ்வரனும் பார்வதி தேவியும் சேர்ந்திருப்பது போன்று, இரண்டு ருத்ராட்சங்கள் ஒன்றாக இணைந்த வடிவில் காணப்படும் இந்த ருத்ராட்சம், விசேஷமானது என்பார்கள். அதேபோன்று கண்டிகை என்று செல்வார்கள். பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்தகு மாலைக்கு கண்டிகை என்று பெயர். ருத்ராட்ச மாலை கொண்டு ஜபிக்கும் பக்தர்கள் அறிய வேண்டிய ஒரு தகவலும் உண்டு. அதாவது, மோட்சம் வேண்டுவோர் ருத்ராட்சங்களை மேல் நோக்கியும், போக வாழ்வு விரும்புவோர் ருத்ராட்சங்களை கீழ் நோக்கியும் தள்ளி ஜபிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !