அழியா புகழ் தரும் அபிஷேகம்!
ADDED :4310 days ago
அனுதினமும் தேவி சக்தியை வழிபடும் அம்பாள் பக்தர்கள் வில்வ இலைகளால் தேவியைப் பூஜிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சந்தோஷமாக இருப்பார்கள். கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து சக்திக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும். லட்சுமிதேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், நித்தியத்துவம் கிடைக்கும்; அழியா புகழ் பெறலாம் என்கின்றன ஞான நூல்கள். ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவான். பூக்களால் தேவியை பூஜிப்பவருக்கு கயிலாய வாசம் கிடைக்கும்.