உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலைநயக் குடைவரைக் கோயில்!

கலைநயக் குடைவரைக் கோயில்!

திருமயம், கம்பீரமான கோட்டை, குடைவரைக் கோயில்கள், சரித்திரைச் சின்னங்கள் அமையப் பெற்ற திருத்தலமாகத் திகழ்கிறது. வட்ட வடிவமான இக்கோட்டை பத்மகக் கோட்டை என அழைக்கப்பட்டது. ஏழு மதில் சுவர்களைக் கொண்ட இக்கோட்டையில் தற்போது நான்கு சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோட்டையின் வடக்கு வாசலில் பைரவரும், தெற்கு வாசலில் அனுமன், சக்தி கணபதி ஆகியோரும், தென் கிழக்கில் முனீஸ்வரரும் காவல் தெய்வங்களாக உள்ளனர். குன்றின் மேற்குச் சரிவில் உன்னத கலை நயத்துடன் கூடிய குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. சிவபெருமானுக்கும், திருமாலுக்குமாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரைக் கோயில்கள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !