ராதா கல்யாணம்!
ADDED :4306 days ago
மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள முடிகொண்டான் கிராமம், மேல அக்ரஹாரத்தில் ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா உள்ளது. இங்கு இன்று முதல் பிப்.3 வரை ராதா கல்யாணம் நடக்கிறது. காலையில் பிருந்தாவன மகாத்மியம் மூலபாராயணமும், இரவு பாகவத மகாத்மியம் என்ற தலைப்பில் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசமும் நடக்கிறது. பிப்.3 காலை 10 மணிக்கு ராதிகா ரமண வேணுகோபால சுவாமி திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு மூலைக்குளத்தில் தெப்போத்ஸவமும் நடக்கிறது. போன்: 04366- 230 142.