உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதங்கள் தோன்றிய விதம்!

வேதங்கள் தோன்றிய விதம்!

பராசர முனிவருக்கும் மச்சகந்தி என்னும் மங்கை நல்லாளுக்கும் திருமாலின் அம்சமாகப் பிறந்தவர் வேதவியாசர் என்னும் புனிதர். ஒரு சமயம் இவரை அழைத்த ஈசன், உலகில் தாறுமாறாகக் கிடக்கும் வேதங்களை முறைப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஈசனின் கட்டளையை சிரமேற்கொண்ட வேதவியாசர், பெருமுயற்சிக்குப் பின்னர் வேதங்கள் யாவற்றையும் திரட்டியெடுத்து ரிக்- யஜுர்- சாம- அதர்வண என்னும் நான்கு பெரும் பிரிவுகளாக வகுத்தளித்தார். சுமார் 1028 ஸ்லோகங்களைக் கொண்ட மிகப் பழமையானதும்- முதன்மையானதும் ரிக் வேதம் ஆகும். ஆரிய வம்சத்தினர் கடவுள் வழிபாடாகக் கொண்டது. அதேபோல பற்பல சடங்குகளையும் யாகங்கள் செய்யும் - முறைகளையும் கூறுவது யஜுர் வேதமாகும். இசைப்பாடகளின் வடிவில் சுமார் 1810 பாடல்களைக் கொண்டது. சாம வேதம். மாயமந்திரம் தந்திரங்கள், வித்தைகள் போன்றவற்றை சுமார் 731 பாடல்களால் விவரிப்பது அதர்வண வேதமாகும். இயற்கையின் சக்திகளான சூரியன், சந்திரன், இந்திரன், வருணன், வாயு, சோமன் ஆகியோரை அனைத்து ஆரியர்களும் வழிபட்டனர் என்பது வரலாறு. பொதுவாக மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட வேறு பல சக்திகளாலேயே மானுடம் வழி நடத்தப்படுகிறது என்ற உண்மைகளையே அனைத்து வேதங்களும் கூறுகின்றன. அதுவே வேதவாக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !