உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இல்லற இனிமைக்கு சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி!

இல்லற இனிமைக்கு சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி!

ஸ்ரீகிருஷ்ணபகவானின் திருவுருவத்தில் வலப்புறம் சியாமள வர்ணனான ஸ்ரீகிருஷ்ணபகவானும். இடப்புறம் ஆண்டாள் திருமேனியும் ஐக்கிய பாவத்தில் இணைந்த அழகிய அர்த்தநாரி உருவமாக விளங்கும் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தை வழிபடுவதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் நெருக்கமும் இனிமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அழகிய திருமேனியை அதற்குரிய துதியைக் கூறி வழிபடுவது சமீப ஆண்டுகளில் மிகப் பிரபலமாகி வருகிறது.

திவ்யாபரண பூஷிதராக, காண்போரைப் பரவச மடைய வைக்கும் (சம்மோஹன) இந்த ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தில் சிரசின் வலப்புறம் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மயிற்பீலியும், இடப்புறம் ஆண்டாளுக்குரிய கொண்டையும். நீண்ட அழகிய பின்னலும் காட்டப்பட்டுள்ளன. வலது செவியில் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மகர நெடுங்குழையும் இடது செவியில் தேவிக்குரிய காதணியும் ஒளிர்கின்றன. மேலும் அஷ்ட ஐஸ்வர்யங்களைக் குறிக்கின்ற வகையில் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணருக்கு எட்டு கரங்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் முன்னிரு கரங்களில் பக்தர்களின் அனைத்துக் கவலைகளையும் மறக்கச் செய்யும் இனிய இசையைப் பொழியும் புல்லாங்குழலை ஏந்தியுள்ளார். மேலிரு கரங்களில் திருமாலுக்குரிய சங்கு. சக்கரம், அதன் கீழ் கரங்களில் இடப்புறம் திருமகளுக்குரிய தாமரை மலர், வலப்புறம் அங்குசம், அடுத்த இரண்டு கரங்களில் மன்மதனுக்குரிய வில், புஷ்ப பாணங்கள் திவ்ய ஆயுதங்களாக காட்சி தருகின்றன. வலப்புறம் கிருஷ்ணபகவானுக்குரிய சியாமள வண்ணத்தோடு, பீதாம்பரம் அணிந்தும் இட்பபுறம் ஆண்டாளுக்குரிய பொன் வண்ணத்தோடு பட்டாடை அணிந்தும், சர்வாலங்கார பூஷிதராக ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் அருள்பலிக்கிறார். குறிப்பாக, மணப்பேறு, மகப்பேறு, செல்வளம் மற்றும் தம்பதியரிடையே இல்லற இனிமை மேலோங்க, ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் படத்தை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் கீழ்க்கண்ட துதியை பக்தியுடன் சொல்லி வழிபட அனைத்து நலன்களும் பலன்களும் கிட்டும் என்பது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !