உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

வேங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

புதுச்சேரி: வேங்கடாஜலபதி கோவிலில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கொம்பாக்கத்தில் அமைந்துள்ள, வேங்கடாஜலபதி கோவிலில், ஸம்வத்ஸரா அபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம், மூலவருக்கு பெரிய திருமஞ்சனம் காலையில் நடந்தது.

மாலையில், வேங்கடேசப் பெருமாள்-அலர்மேல் மங்கைத் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக, வரிசை எடுத்து வருதல், மாலை மாற்றுதல், ஊஞ்சல், நலங்கு உள்ளிட்ட வைபவங்களும், திருக்கல்யாண உற்சவத்துக்கு பிறகு, சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !