ராதா கல்யாண மகோற்சவ விழா!
ADDED :3906 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஸ்ரீ குரு சஞ்ஜீவி பஜனா மண்டலி சார்பில், 21ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்சவ விழா, பொள்ளாச்சி சங்கர விநாயகர் பஜனை மடத்தில் நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு மங்கள இசையுடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், தொடர்ந்து, ராஜகோபால் தாஸ் குழுவினரின் அஷ்டபதி பஜன் நிகழ்ச்சியும்; மாலை, 3:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம், தொடர்ந்து, பஞ்சபதி, தியானம், பூஜை, திவ்யநாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை, 8:00 மணிக்கு உஞ்சவிர்த்தி, காலை, 9:00 மணி முதல் ராதா கல்யாணமும், மதியம், 12:30 மணிக்கு ஆஞ்சநேய தியானமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.