உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப்.5 ல் பிரம்ம தெப்பத்திருவிழா!

பிப்.5 ல் பிரம்ம தெப்பத்திருவிழா!

திருவேடகம் : திருவேடகம் ஏடகநாதர்சுவாமி கோயிலில் பிப்.5ல் தைமாத பவுர்ணமியை முன்னிட்டு பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா நடக்கிறது.

பிரம்மன் சாபவிமோசனம் பெற திருவேடகம் ஏடகநாதர்சுவாமி கோயில் வைகை கரையில் பரிகார பூஜை செய்தார். தீர்த்தம் கிடைக்க பூமியில் கை வைக்க புனித தீர்த்தம் சுரந்தது. அவர் முன் பார்வதி, சிவனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சாபவிமோசனம் அளித்தனர் என்பது தலவரலாறு.

இதையொட்டி பிரம்மதீர்த்த தெப்பம் அமைந்தது. தைமாதம் பவுர்ணமி இரண்டாம் நாள் இங்கு
தெப்பத்திருவிழா நடக்கும்.இந்தாண்டு பிப்.5ல் இரவு 7 மணிக்கு புஷ்பசப்பரத்தில் ஏலவார்குழலியம்மன் ஏடகநாதர்சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பிரம்மாவிற்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுமதி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !