ஜவகர் நகர் கோவிலில் கும்பாபிஷேக விழா!
ADDED :4063 days ago
புதுச்சேரி : ஜவகர் நகரிலுள்ள நல்லாண்ட முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
உழவர்கரை தொகுதி, ஜவகர் நகரிலுள்ள நல்லாண்ட முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9.05 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர், சேர்மன் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.