உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோயிலில் 1000 கிலோ பூக்களால் அலங்காரம்!

மலைக்கோயிலில் 1000 கிலோ பூக்களால் அலங்காரம்!

பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் உட்பிரகாரம் பெங்களூருலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரம் கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பழநி புஷ்பகைங்கர்யா சபா சார்பில் மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபம் மஞ்சள், பிங்க், ரோஸ் உட்பட பலவண்ண ரோஜாபூக்கள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டது. இதற்காக பெங்களூரிலிருந்து ஜருபுரா, பலவண்ண ரோஜா பூக்கள், பூங்கொத்துகள் வரவழைக்கப்பட்டது. இவைகளுடன் செவ்வந்தி, மல்லிகை, ரோஜாப்பூக்கள் மலைக்கோயில் உட்பிரகாரத்தில் நிலமாலைகளாகவும். மண்டப தூண்களில் பூங்கொத்துகளும், பலவண்ணப்பூக்களின் ரங்கோலியும் வரையபட்டிருந்தது. ஏற்பாடுகளை பழநி புஸ்பகைங்கர்யா சபா தலைவர் கண்பத் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து, திண்டுக்கல் ஆடிட்டர் நடராஜன், சபா நிர்வாகிகள் சின்னச்சாமி, மருதுசாமி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !