ராதா ருக்மணி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4071 days ago
ஊத்துக்கோட்டை: ராதா ருக்மணி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெங்கல் அடுத்த மாம்பள்ளம் கிராமத்தில் உள்ளது ராதாருக்மணி ஸ்ரீகிருஷ்ணர் கோவில். சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில் பகுதிவாசிகளால் சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் மாம்பள்ளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை ஒட்டி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பெரியோர்கள் செய்தனர்.