உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொதிக்கும் எண்ணெயில் இருந்து கையால் வடை எடுத்த பக்தர்கள்!

கொதிக்கும் எண்ணெயில் இருந்து கையால் வடை எடுத்த பக்தர்கள்!

வேலூர்: தைப்பூச திருவிழாவையொட்டி, கொதிக்கும் எண்ணெயில் இருந்து, கையால் வடை எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், நேற்று முன்தினம், தைப்பூச திருவிழா கோலாகல மாக நடந்தது.

அன்று காலை 5:00 மணி முதல், தீ மிதிப்பது; காவடி எடுப்பது; சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பின், மார்பு மீது அம்மியை வைத்து உலக்கை யால் மஞ்சள் இடிப்பது; முள் மீது படுப்பது; கொதிக்கும் எண்ணெயில் இருந்து கையால் வடை எடுப்பது; கயிறு மூலம் அலகு குத்தி, சுவாமிக்கு மாலை அணிவித்து, தீபாராதனை செய்வது; செக்கு இழுப்பது, நாக்கில் அலகு குத்தி வேல் அணிந்து பூந்தேர், டிராக்டர், டெம்போ, பஸ், உரல் போன்றவற்றை இழுப்பது என பக்தர்கள், விதம் விதமான நேர்த்திக் கடன்களை செலுத்தினர். திருவிழாவை காண, ஆயிரக்கணக்கான பக்தர் கள் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !