ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம்!
திருமழிசை: திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், திருமழிசை ஆழ்வாரின், திருஅவதார மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது.
வெள்ளவேடு அடுத்துள்ள திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள, திருமழிசை ஆழ்வாருக்கு, தை மகம் திருஅவதார மகோற்சவம், நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடந்தது. திருமழிசை ஆழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, காலை 6:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
அதன்பின், காலை 9:30 புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று, பிற்பகல் 2:30 மணியளவில் கோவிலை அடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என, கோஷமிட்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு, திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.