ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4069 days ago
புதூர் : மதுரை ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழா கமிட்டி சார்பில் கடந்த நவ.,ல் பணிகள் துவங்கின. தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சுவாமிகளுக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டது. கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது. யாகசாலை பூஜை பிப்.2ல் துவங்கியது. நேற்று காலை 11.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.தென்மண்டல ஐ.ஜி., அபய்குமார்சிங், கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி., ஆனந்த்குமார் சோமானி, எஸ்.பி., விஜயேந்திர பிதரி, துணை கமிஷனர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டை துணைகமிஷனர் ஈஸ்வரன், உதவிகமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சிவக்குமார் செய்திருந்தனர்.