காரிய சித்தி கணபதி கோவிலில் சங்கட நிவாரண ஹோமம்!
ADDED :4067 days ago
திருவள்ளூர்: ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், நாளை (7ம் தேதி), சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது பொன்னேரி, பஞ்செட்டி அருகே, நத்தம் கிராமத்தில் (இகனபாக்கம்), ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி கோவில் உள்ளது. இங்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (7ம் தேதி) காலை 9:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை சங்கட நிவாரண ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, ககார சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றன. பிற்பகல் 1:30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.