உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குப்பூர் காளியம்மன் கோவில் தேரோட்டம்!

குப்பூர் காளியம்மன் கோவில் தேரோட்டம்!

ஓமலூர்:ஓமலூர் அடுத்த குப்பூர் காளியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ஓமலூர் அடுத்த சிக்கனம்பட்டி கிராமம், குப்பூர் காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் தேதி சக்தியுடன் கரகம், பொங்கல் மற்றும் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது.

நேற்று மாலை, 5 மணிக்கு, காளியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. தேர் திடலில் புறப்பட்ட தேரானது, கோவிலை சுற்றி வலம் வந்து, மீண்டும் தேர் திடலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !