உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூச்சொரிதல் நிகழ்ச்சி!

பூச்சொரிதல் நிகழ்ச்சி!

சேலம்:வீரகனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.கெங்கவல்லி வட்டத்தில் உள்ள வீரகனூரில், ஸ்ரீ பருவதராஜ குல அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியுள்ள இக்கோவிலில், மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பருவதராஜகுல பொதுமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !