பழநிகோயிலில் இன்று தங்கரத புறப்பாடு!
ADDED :4250 days ago
பழநி : தைப்பூச விழாவைமுன்னிட்டு நிறுத்திவைக்கப்பட்ட தங்கரத புறப்பாடு இன்று(பிப்.,6) முதல் வழக்கம்போல் நடக்கிறது.
பழநி மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்குமேல் தங்கரதத்தில் சின்னக்குமார சுவாமி புறப்பாடு நடக்கிறது. ரூ.2 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் தங்கரதம் இழுத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். எத்தனைபேர் தங்கரத புறப்பாட்டிற்கு கட்டணம் செலுத்தியிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் வெளிப்பிரகாரத்தில் சின்னக்குமாரசாமி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சி தைப்பூசவிழாவை முன்னிட்டு பிப். 1 முதல் பிப்.,5 நிறுத்தப்பட்டிருந்தது. இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமார சுவாமி புறப்பாடு நடக்கிறது. தற்போது பக்தர்கள் "ஆன் லைனில் தங்கரத புறப்பாட்டிற்கு பதிவுசெய்யும் வசதி உள்ளது குறிப்பிடதக்கது.